தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெருவில் சிலுவையார் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், கவுன்சிலா் பவானி, வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதி மார்ஷல், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ராபர்ட், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ்மணி, வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரெடிஸ்டன், விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி ரக்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி சாலமன், அண்ணா சங்குகுளி சங்க தலைவர் இசக்கிமுத்து, சிந்தாதுரை மாதா மீனவர் சங்க ஆல்ட்ரின், மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ராஜா போஸ் ரீகன் மற்றும் சிலுவையார் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இளையான்ஸ், சாம்சன், ராஜன், சுதர்சன், அபிசன், மெல்பர், பிதலீஸ், சேவியர், சஞ்சய், ரெனால்ட் முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனர்.


