தமிழ் – ஒரு செம்மொழி
**********
தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று.
கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம் ஆகிய மொழிகளுடன் இணைந்து செம்மொழி சிறப்பைப் பெற்ற மொழி தமிழ்.
ஒரு மொழியின் இலக்கிய வளமும், வரலாற்று தொடர்ச்சியும், தனித்துவமான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் அதனை “செம்மொழி” நிலைக்கு உயர்த்துகின்றன.
தமிழ் மொழி ஆயிரமாண்டுகளைத் தாண்டிய பாரம்பரியத்தை உடையது.
இலக்கியம், இலக்கணம், மருத்துவம், கணிதம், வானியல், வரலாறு, பூகோளம் என பல துறைகளில் நூல்கள் அமைந்துள்ளன.
செய்யுள் மரபிலிருந்து
*********
உரைநடைக்கு
******
கி.பி. 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் எழுத்து உலகம் பெரும்பாலும் செய்யுள் நடையிலேயே இருந்தது.
அச்சகங்கள் வருவதற்கு முன்
பனையோலைகள், தோல்சுருள்கள் வழியாக
அறிவு பரவியது.
ஆனால் செய்யுள் வடிவம்
மொழியறிவில் தேர்ச்சி இல்லாதோருக்கு எளிதாக அணுக முடியாத ஒன்றாக இருந்தது.இதனால்
“பேச்சு மொழிக்கு அருகான எழுத்து நடை” என்ற தேவை உருவானது.அதுவே உரைநடை வடிவம்.
உரைநடை
******
பேச்சு மொழிக்கும் செய்யுள் நடைக்கும் இடையிலிருந்த இடைவெளியை
உரைநடை உடைத்தது. எழுதவும் வாசிக்கவும் தெரிந்த
பொதுமக்களும் வாசிக்கத் தொடங்கினர்.ஆனால்,செய்யுள் மரபினை கற்றுத் தேர்ந்தவர்களால் ஆரம்பத்தில் குழப்பங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டன.
செய்யுள் மரபை விரும்பியவர்களால் உண்டான
எதிர்ப்பு வலுத்தது.இருப்பினும்
எளிமையின் பலத்தால்
உரைநடை வெற்றி பெற்றது.
ஐரோப்பிய மிஷனெரிகள்
************
தமிழில் உரைநடை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்
ஐரோப்பிய கிறித்தவ மிஷனெரிகள்.
16 ஆம் நூற்றாண்டில்
அச்சு இயந்திரம் தமிழகம் வந்தது.1578 ஆம் ஆண்டு
“தம்பிரான் வணக்கம்” என்ற தமிழின் முதல் நூல் அச்சிடப்பட்டது.
இதனை
Henrique Henriques (அண்ட்ரிக் அடிகளார்) என்ற கத்தோலிக்க பாதிரியார் வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து
“கிறிஸ்தியானி வணக்கம்”, “அடியார் வரலாறு” போன்ற நூல்கள் வெளிவந்தன.
அதன் பின்னர்
Roberto de Nobili( இராபர்ட் டி நோப்ளி), வீரமாமுனிவர்
(Veeramamunivar)
போன்றோர் உரைநடையில் பல நூல்கள் எழுதினர்.
வீரமாமுனிவரின் சதுரகராதி
தமிழின் முதற்கால அகராதிகளில் ஒன்றாகும்.
சீர்திருத்தக் கிறித்தவமும்
கல்விப் புரட்சியும்
1706 இல் பார்த்தலோமஸ் சீகன்பால்கு
(Bartholomaus Ziegenbalg) என்பவர்
தரங்கம்பாடியில் அச்சுக் கூடம் அமைத்து
பொதுமக்களுக்கான நூல்களை வெளியிட்டார்.அதன் மூலம்
தமிழ் பனையோலைகளிலிருந்து அச்சு எழுத்துக்கள் உலகுக்குள் நுழைந்தன.பாட நூல்களும் அச்சாகும் அளவில் மிக வேகமாக
முன்னேற்றம் கண்டன.
இதனால் 19 ஆம் நூற்றாண்டில்
கல்வி பரவலானது.சாதி மத பேதமின்றி கற்கும் நோக்கில்
பள்ளிகள் நிறுவப்பட்டன.
மொழிப் பாடத்தோடு
கணிதம், பூகோளம், உலக வரலாறு, அறிவியல் போன்ற பாடங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன.
துண்டுப் பிரசுரங்கள்
*********
181வெி.இ இரேனியஸ்
(C. T. E. Rhenius) என்ற பாதிரியார்
“Madras Tract and Religious Book Society” என்ற அமைப்பை தொடங்கி துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்பினார்.
உரைநடையில்
இடைவெளி விட்டு எழுதும் நடை,
நிறுத்தற் குறியீடுகள் பயன்படுத்துதல் போன்ற மாற்றங்களும்
அவர்களின் பங்களிப்பாகும்.
விவிலிய மொழிபெயர்ப்பு
************
கிறித்தவ புனித நூலான விவிலியம் தான்
இந்திய மொழிகளில் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
இம்மொழிபெயர்ப்பு பணிகள்
தமிழ் உரைநடையை மேலும் செம்மைப்படுத்தின.
கிறிஸ்தவ மிஷனெரியும் தமிழ் மொழியின் ஆய்வாளருமான கால்டுவெல் ( Robert Coldvel)
திராவிட மொழியியலின் அடித்தளமாக விளங்கியவர்.
1838 இல் இந்தியா வந்த இவர்
1856 இல் வெளியிட்ட
“Comparative Grammar of the Dravidian Languages”
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் தனித்துவத்தை உலகறியச் செய்தது.
அவரைத் தொடர்ந்து இந்தியாவிற்கு கிறிஸ்தவ சமயப் பணியாளர்களக வந்தவர்களும் தமிழ் மொழியை செழுமையாக்கியதில் அந்தந்த கால கட்டங்களில் தங்களது கல்விப் பணி மற்றும் சமயப் பணிகளின் மூலம் பங்காற்றி நமது மொழிக்கு சிறப்பு செய்துள்ளனர் .
தமிழ் உரைநடை வளர்ச்சியில்
கிறித்தவ மிஷனெரிகள் ஆற்றிய பங்கு மறுக்க முடியாதது. அவர்களது சீரிய தமிழ்ப் பற்றாலும் தேர்ந்த மொழி ஆய்வினாலும்
அச்சு, கல்வி, மொழிபெயர்ப்பு, அகராதி, இலக்கணம், அறிவியல் போன்ற அனைத்துவகையான மொழியின் முகங்களும்
தமிழை பொதுமக்களின் மொழியாக மாற்றின.


