
ஸ்ரீவைகுண்டம் – ஆழ்வார் திருநகரி இடையே தாமிரபரணி ஆற்றில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எக்ஸ்னரோ நிறுவன வாடகை இல்லா இயந்திரம் மூலம் முள்செடிகளை பிடிங்கி மாதிரி தாமிரபரணியாக மாற்றி 1000 மரக்கன்று நடும்பணி மற்றும் 1 லட்சம் பனை விதைகள் விதைத்தல் பணியை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் துவக்கி வைத்தார். இதற்கான பணியை மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம்மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள பேரூராட்சி, மரம் வளர்க்கும் நபர்கள் மூலம் செய்து வருகிறது. இதன் மற்றொருபணியாக ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட வன அலுவலர்இளையராஜா மரம் நடுதல், பனை விதை விதைத்தல் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் 1 லட்சம் விதைப்பந்துகள் வி¬த்தல் போன்ற பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பொன்னன்குறிச்சி பகுதியில் முள்செடி பிடிங்கும்பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் இரண்டாம் கட்டமாக மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் ஆழ்வார் திருநகரி பேரூராட்சி இணைந்து ஆழ்வார் திருநகரி தாமிரபரணி நதி கரையில் பத்தாயிரம் பனை விதைகள் விதைத்தல் மற்றும் 300 மரக்கன்றுகள் நடுதல் பராமரித்தல் ஆகிய நிகழ்வு நடைபெற்றது. ஆழ்வார் திருநகரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் காயத்திரி பனை விதையை நட்டு துவக்கி வைத்தார்கள். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்வில் சிலம்ப சண்முகசுந்தரம் , சமூக ஆர்வலர் வெங்கடாச்சாரியார் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் ஆனந்த செல்வன், ஆறுமுக வடிவு, பிரேமா. முருக செல்வி , தன்னார்வ தொண்டர்கள் விஜயகுமார், ஜெயராம், சரவணகுமார், செல்வன் துரை கலந்து கொண்டனர்.