
1922-ல் மூன்று பேர் கூடி குடிசையில் நேரம் கிடைக்கும் போது தேவனை ஆராதித்து வந்தார்கள். ஊழியர்கள் அவ்வப்போது வரும் போது கூட்டங்கள் நடத்தி ஆராதனை நடத்தி சபையாரை உற்சாகப் படுத்தி வந்தனர். வழக்கமான ஆராதனை ஒழுங்குகள் இல்லாமல் இருந்தது. 1952-ல் பேராயர் G.T.செல்வின் அவர்களின் ஆலோசனையின் பேரில் தினசரி இரவு ஆராதனையும் வழக்கமான சபை ஆராதனையும் நடத்த ஆரம்பித்தனர் சபையார் உற்சாகமாக எல்லா ஆராதனைகளிலும் கலந்து கொண்டு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தி வந்தனர். 1960-ல் ஆலயத்திற்கு தேவையான மேஜை, நாற்காலி, கொட்டு ஆகிய பொருட்களை ஒரு கொழும்பு கார வியாபாரி நன்கொடையாக கொடுத்தார். 1969-ல் ஆலயத்திற்கு சபையாரின் பெருமுயற்சியால் மின் இணைப்பு வாங்கப்பட்டு மின்சார பல்புகள் ஆலயத்தில் மாட்டப்பட்டது. 1971-ல் ஆலயத்தை மறுசீர் அமைத்து பேராயர் காரட் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1975-ல் ஆல்டர் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1976-ல் மண்டபம் கட்டபட்டது. 1998-ல் ஆலயத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. 2004-ல் ஸ்டோர் ரூம் கட்டப்பட்டது. 2008-ல் கோபுரம் கட்டப்பட்டது. 2017-ல் ஆலய விஸ்திகரிப்பு செய்யப்பட்டது. 2019- ல் ஸ்டேஜ் கட்டப்பட்டது. இப்படியாக திருநெல்வேலி திருமண்டலமாக இருந்த காலத்தில் இருந்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டலமாக மாற்றப்பட்டு தென்னிந்திய திருச்சபையின்
வளர்ந்து வரும் சபைகளில் ஒன்றான கருங்குளம் மேலூர் கிறிஸ்து ஆலயம் வளர்ந்து வருகிறது. உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும் தடை செய்யாதே. உன் கயிறுகளை நீளமாக்கி உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலது புறத்திலும் இடது புறத்திலும் இடங் கொண்டு பெருகுவாய். என்ற ஏசாயா 54:2.3-ன் படி கர்த்தர் நித்தமும் சபையை பெருகச் செய்கிறார். தேவனுக்கே மதிமை உண்டாவதாக.
ஆமென், அல்லோலுயா