தூத்துக்குடி மாவட்ட ஆவினில் காலியாக உள்ள 2 கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 152 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 27000 லிட்டர் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய பணிநிலைத்திறனில் ஒப்பந்த அடிப்படையிலான ஒதுக்கீடு செய்யப்பட்டு காலியாக உள்ள 2 கால்நடை உதவி மருத்துவர் பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள 50 வயதுக்குட்பட்ட, சொந்தமாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் வரும் 21.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். லிட், 74F. பால விநாயகர் கோவில் தெரு, (2வது தளம்), தூத்துக்குடி என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


