தூத்துக்குடி மாவட்டத்தில் 207 பள்ளிளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று (பிப்ரவரி 9) தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 8,906 மாணவர்கள் மற்றும் 10,882 மாணவிகள் என மொத்தம் 19,788 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல், நர்சிங் மற்றும் ஆடிட்டிங் உள்ளிட்ட 11 பாடப்பிரிவுகளைப் பயிலும் மாணவர்களுக்கு இந்தச் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்தத் தேர்வுகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இதற்காகப் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்முறைத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.


