நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாமில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளரும் கல்லூரி செயலருமான தேவா காபிரியேல் ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) முகாம் நடைபெற்றது. இதில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் டாக்டர் தேவா காபிரியேல் ஜெபராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் ரத்ததானம் செய்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 100 பேர் ரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆக்னஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் கலந்து கொண்டார். கல்லூரி பேராசிரியர் ஸ்டான்லி ரத்ததான விழிப்புணர்வு குறித்து பேசினார்.
இந் நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஸ்மைலி, துணை முதல்வர் காட்டன் பிரபு, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஞானசெல்வன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


