தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அகிலன், ராலி இஞ்சினியரிங் நிர்வாக இயக்குநரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான அன்டோ ஆலன் ஆகியோர் கல்வி, விளையாட்டு மற்றும் இதர போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். மேலும், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆண்டு விழாவிற்காக ‘மகிழ்ச்சியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கை’ எனும் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை விளக்கும் விதமாக மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாடல்கள், நடனம் மற்றும் குறும்படங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்குக் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன.
இந்த விழாவில் பிஎம்சி குழும இயக்குநர் சுபின் சுகுமார், பள்ளிகளின் தாளாளர் ஐ. ஜோசப் ஜான் கென்னடி, பள்ளியின் முதல்வர் ஜி. பால்கனி, துணை முதல்வர் ஜேன் மேத்யூ, துணை தலைமையாசிரியை பிரியா மற்றும் இதர பிஎம்சி பள்ளிகளின் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் வரவேற்றார். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் நன்றியுரை வழங்கினார்.


