தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் 1056 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 1056 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் ஒதுக்கவில்லை. தமிழில் திருக்குறள் கூட படிக்கவில்லை. மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் எதற்குமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.
தமிழகத்திற்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திமுக அரசை தொடர்ந்து விஜய் விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் புரியாமல் பேசுகிறார் என்றார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


