தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் வரலாறு கிளப் துவங்கப்பட்டது. முதல்வர் வீரபாகு தலைமை வகித்தார். முனைவர் ஜெயகுமாரி வரவேற்றார். முத்தாலங்குறிச்சி காமராசு, பட்டினமருதூர் ராஜேஷ் செல்வ ரதி, எழுத்தாளர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார்கள். கல்லூரி உதவி பேராசிரியர்கள் முனைவர் ஆறுமுக மாசன சுடலை, முனைவர் பாரதி ராஜா, முனைவர் பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டனர். வரலாற்று கிளப் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆரோக்கிய செல்வ சுந்தரி செய்திருந்தார்.


