கன்னியாஸ்திரீகள், பாதிரியார்கள், பிஷப் போன்றவர்களுக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த சாமானியர் ஒருவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டில் வாழ்ந்தவரான கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம் என்ற சாதாரண மனிதருக்குப் புனிதர் படம் வழங்கப்படுமென வாடிகனில் உள்ள திருச்சபை கட்டமைப்பு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த சாமானியர் ஒருவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுமெனவும், வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியும் தற்போதைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் அருகேயுள்ள பள்ளியாடி கிராமத்தில் வாசுதேவன் தேவகி தம்பதியருக்கு 21.1.1712ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நீலகண்ட பிள்ளை. இவருடைய தந்தை வாசுதேவன், திருவிதாங்கூர் அரசவையில் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தார். நீலகண்ட பிள்ளையையும் அரசில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.1141 ஆம் ஆண்டு டச்சு கப்பல் படைகள் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கல் போரிட்டன.இதில் டச்சு படைகள் தோற்ற போது அப்படையில் கேப்டனான டிலெனாய் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அரசரின் நம்பிக்கையைப் பெற்று டிலெனாய் தளபதியாக உயர்ந்தார். டிலெனாய் பழக்கத்தால் அவர் பின்பற்றிய கிறிஸ்துவ மதத்தினால் நீலகண்ட பிள்ளை கிறிஸ்துவ மதத்தில், இணைத்துக்கொண்டு லாசர் எனப் பெயரை மாற்றிக் கொண்டார். கடவுள் எனப் பொருள் படும் வகையில் தேவசகாயம் எனும் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டார்.தேவசகாயம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றியதால் அவர் கைது செய்யப்பட்டு 1712ஆம் பூண்டு கொல்லப்பட்டதாக வாடிகன் செய்திக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் 2012ஆம் ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். தற்போது புனிதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவசகாயம் புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர் ஆவார்.


