தூத்துக்குடி மாவட்டம் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்புப் பயிலரங்கம் நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் இளங்கோ செயலராக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, முத்தாலங்குறிச்சி காமராசு, இரா.ராசு, முனைவர் சரவணகுமார் , பே. சங்கரலிங்கம், அன்பழகன் ஆகியோர் கண்காணிப்பு குழு உறுப்பினராக இந்த திட்டத்தில் பணிபுரிந்துவருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் திருக்குறள் திருப்பணிகள் பயிலரங்கம் நடந்து வருகிறது.

இந்த திட்டம் திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் வகுப்பு நடந்தது. இந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்க சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கு நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சி முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். ஜோஸ்மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெய்த்தூன் பீவி முன்னிலை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. திருக்குறள் திட்டப்பணிகள் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கண்காணிக்குழு உறுப்பினர் முனைவர் சரவணகுமார், அண்டார்டிகா ஆய்வாளர் இளங்கோ, முனைவர் கந்தசுப்பு, முனைவர் மணிமொழிச்செல்வன், முனைவர் ஜெயசித்ரா, எழுத்தாளர்கள் தூத்துக்குடி மாரிமுத்து, காளிமுத்து , ஆசிரியர்கள் அருள்செல்வி, அங்கயற்கனி, சியாமளா, டெமி அருள்டா, மகாலெட்சுமி, பானுமதி, ஜெபஸ்லின், தனலெட்சுமி, தமிழ் வளர்ச்சித்துறை அழகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை திருக்குறள் திருப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பு குழு செய்திருந்தது.


