தூய சவேரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 71வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தலைமை தாங்கி குடியரசு தின உரையை கல்லூரியின் முதல்வர் ஆவுடையப்பன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் வெங்கடேஷ், அமலன், ஆறுமுக சேகர், ஜான் செண்பக துறை, ரோசல் புஷ்பா, அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், உடற்கல்வி இயக்குனர் ராகுல் மற்றும் ஆசிரிய பெருமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஆறுமுகசேகர் என் எஸ் எஸ் அலுவலர் நிகழ்ச்சியை வரவேற்றார். மாணவர் அழகு மாயாண்டி நன்றி உரை வழங்கினார். மாணவர் ஜோசப் பிரைட்டன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் செய்திருந்தார்கள்.