
கருங்குளம் ஒன்றியம் ஆழிகுடி ஆர்.சி. துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஆழிகுடி துரைப்பாண்டியனுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.
அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். நாட்டார்குளம் சத்துணவு அமைப்பாளர் தஸ்நேவீஸ் வரவேற்றார். சத்துணவு சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, சத்துணவு மேலாளர் சுல்தான் அலாவுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முறப்பநாடு புதுகிராமம் பஞ்சாயத்து துணை தலைவர் சுப்பிரமணியன், சத்துணவு சங்கத்தினை சேர்ந்த மாவட்ட துணைதலைவர் மரியநேசம், ஸ்ரீவைகுண்டம் வட்டார செயலாளர் ஜெயலட்சுமி, அன்னமரியாள், வேல்முருகன், வின்சென்ட், எல்.எக்ஸ்.ஜே. பாண்டியன் உள்பட பலர் பேசினர். துரைபாண்டியன் ஏற்புரை வழங்கினார்.
வல்லநாடு பேச்சி, ஆறுமுகம், காலாங்கரை முருகன், பாஷியம், மகாதேவன், பண்டாரம், முத்து, கோமதிநாயகம், ராஜேந்திரன், சிவலிங்கம், சத்துணவு எழுத்தர் அகிலா, கம்யூட்டர் ஜான்சி, எம்.என். ராணி, சாந்தி, இந்திரா, அனிதா, ஜெயபார்வதி, படுகை ஆறுமுகம், முத்து, ஜேம்ஸ், அடைக்கலம், ஜெபராஜ், பூல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். காசி மணி நன்றி கூறினார்.