Description
பொருநை கரையில் புதைந்த ரகசியங்கள் பாகம் 2 என்ற இந்நூலில் தாமிரபரணியை மற்றொரு கண்ணோட்டத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ரசித்து எழுதியுள்ளார். இதுவரை அவர் தாமிரபரணி பற்றி எழுதிய நூல்களில் இந்த நூல் வித்தியாசமானது பொதிகை,குற்றாலம்,அத்ரி, பாபநாசம் மலை பயணம், மணிமுத்தாறு தலையருவி பயணம்,மாஞ்சோலை வரலாறு என தான் கலைப்பணிக்காக சென்ற இடங்கள் உள்பட பல்வேறு சுவையான பொருநை கரை சிறப்புகளை எழுதியுள்ளார். குறுக்குத்துறை ரகசியம் திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் போலவே பொருநை கரையில் புதைந்த ரகசியங்களும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.