Description
உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு. அதுபோலவே தாமிரபரணி கரையில் உள்ள அனைத்து முக்கிய கோயில்கள் வரலாறு அடங்கிய முதல் நூல் என்று கூறினாலும் இந்த நூலுக்கு தகும். 150 பகுதியும் தாமிரபரணி கரையின் பெருமையை புகழ் பாடக்கூடியது. அதோடு மட்டுமல்லாமல் நூலில் ஒவ்வொரு எபிசோட் பகுதியிலும் உள்ள க் யூ ஆர் கோடு மூலம் நவீன போனில் ஸ்கேன் செய்யும் போது ஆசிரியர் வீடியோவில் தோன்றி வரலாற்றை பேசுவார். இது இதுவரை எந்த நதிகள் நூலுக்கும் யாரும் செய்யாத ஒரு புதுமை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் இந்த முறையில் ஆசிரியர் பேசுவது மூலம் தாமிரபரணி பெருமையை தெரிந்து கொள்ளலாம். தாமிரபரணி மகா புஷ்கரத்தினை யொட்டி வேளாக்குறிச்சி ஆதினக்கர்த்தா அவர்களின் உதவியுடன் வெளிவந்த பெருமையான நூல். மகாபுஷ்கரத்தில் ஒவ்வொரு வி.ஐ.பிகளும் தாமிரபரணியில் குளிக்கும் படங்கள் கலரில் மிகச்சிறப்பாக அலங்கரிக்கிறது. தாமிரபரணி கரை ஆன்மிகத்தில் முழுமையான முதல் நூல் இதுவாகும். உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ நூலும் இதுதான்.