செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் – முத்தாலங்குறிச்சி காமராசு- தாமரை பிரதர்ஸ் மீடியா (தினமலர்) விமர்சனம் எழுதியவர் ஏ. சாந்தி பிரபு.

180.00

முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதிய “செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்” என்ற நூல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட 19 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு. சித்தர்களாகிய மகான்கள் மிகவும் எளிமையானவர்கள். அவர்கள் நிகழ்த்தி கொண்டிருக்கும் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியிலும், மியான்மர் நாட்டிலும், வணங்கப்படும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் நிகழ்த்திய அற்புதத்தால் ரயில் பயணத்தை தொடர முடியாமல் திணறியதும், அவர் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த- உடன் ரயில் பிரயாணம் தடையின்றி தொடங்கியதையும் எளிமையான வடிவில் இருக்கும் மகான் நடத்திய அற்புதம் தான் என்பதை வாசிக்கும் மிகவும் மெய்சிலிர்க்கிறது.

Description

ஒவ்வொரு சித்தருடைய அவதார தோற்றத்தை விவரித்து எழுதிய பின்னர், அவர் மகா சமாதி அடைவதற்கு முன்பும் தற்சமயமும் நிகழ்த்திகொண்டிருக்கும் அற்புதங்களையும் உயிரோட்டமாக ஆசிரியர் நம் கண் முன் காட்சிப்படுத்துகிறார்.
ஒவ்வொருவரும் நிகழ்த்திய அற்புதங்களை தெளிவாக விவரிக்கும் இடத்தில் நம்மையும் அறியாமல் பக்தி பரவசத்தில் லயித்து போவதைக் கண்கூடாக உணர முடிகிறது.
அந்தரத்தில் தியானம் செய்த பிச்சு சுவாமிகளின் அற்புதங்களை வாசிக்கும் போது ஒரு சித்தர் என்பவர் ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஜீவராசிகள் ஒவ்வொன்றின் பாலும் கருணையுடன் இருக்கிறவர்கள் என்பதை உணர முடிகிறது.
விஞ்ஞானம் பெரிதா மெஞ்ஞானம் பெரிதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காமல் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் மட்டுமே நம்மால் முழுமையான பலனை அனுபவிக்க முடியும் என்கிற நிசப்தமான உண்மை இந்த நூலைப் படிக்கும் போது புலப்படுகிறது. பெரும்பாலும், நாம் கூர்ந்து கவனித்தோமானால் , ஒரு சித்தர் கோயிலுக்குள் நுழையும் போதே நம்மால் ஒரு பாதுகாப்பு கவசத்ததை உணரமுடியும். ஆசிரியரின் நூலை படித்து விட்டு சித்தர் பீடத்துக்கு சென்றோமானால் நமது நம்பிக்கை பல மடங்கு உயர்ந்து விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.