50 லட்சம் மகளிருக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப்பணியாளர் வேலை வழங்கப்படும் என கனிமொழி உறுதியளித்தார்.
ஒட்டபிடாரம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்டபாளர் சண்முகையாவை ஆதரித்து கனிமொழி கருங்குளம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இவர் வல்லநாடு, வசவப்பபுரம் , நாட்டார்குளம் உள்பட பல பகுதியில் வாக்குசேகரித்தார். நாட்டார்குளம் இசக்கியம்மன்கோயில்அருகில் அவர்பேசியதாவது.
பஞ்சாயத்து தேர்தல் நடத்த துப்புகெட்ட அரசாக தமிழக அரசு மாறிவிட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். விவசாய கடன் , மாணவர்கள் கல்வி கடன்களை தள்ளுபடி செய்வோம். கூட்டுறவு வங்கியில் நகைகடன் வைத்திருக்கும் பெண்களின் கடனை முழுமையாக தள்ளுப்படி செய்வோம். ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் கூட, அவர் தமிழக முதல்வர். அவர்மரணத்தினால் பல மர்மங்கள் உள்ளது. எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தின் மீது விசாரணை நடத்தப்படும். பொள்ளாச்சி பெண்கள் பாதிப்புக்கு நிச்சயம் நியாயம் பெற்று தரப்படும். கடந்த 7 வருடத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் குற்றவாளிகளை அதிமுக அரசு பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சாலை வசதி இல்லை. எனவே இந்த பிரச்சனைக்கு எல்லாம் நாங்கள் தீர்வு காண்போம். கேஸ் விலை 150 ரூபாய் உயர்த்தி உள்ளார்கள். அதை குறைப்போம். 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலையும் 50 மக்கள் நலப்பணியாளர் வேலை தரப்படும். இங்குள்ள பெண்கள் தொழில் துவங்க 50 ஆயிரம் வரை கடன் வழங்க ஆவண செய்யப்படும். இந்த கிராமத்தினை பொறுத்தவரை பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும் , குளத்து கரையில் பாலம் அமைத்து தரப்படும், சமுதாயநலக்கூடம் கட்டித் தரப்படும் என்று பேசினார்.
அவருடன் மாவட்ட செயலாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ , கருப்பசாமி பாண்டியன், உமரிசங்கர், ஆறுமுக பெருமாள், ஒன்றியசெயலாளர்கள் நல்லமுத்து, பார்த்தீபன், மகராஜன், சேக் அப்துல் காதர், பிச்சுவிளை சுதாகர், கணேசன் , கோபால், தோணி அப்துல், வேல் முருகன், கொம்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.