அன்பான நண்பர்களுக்கு, நீங்கள் நண்பர்களாக, வாசகர்களாக, என்னை நேசிப்பவர்களாக பண்முகத்தில் அன்பு காட்டிக்கொண்டிருக்கீறிர்கள். உங்கள் அனைவரையும் மறக்க முடியாது. நான் கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி என்னுடைய பெயரில் வெப்சைட் ஒன்றை ஆரம்பித்தேன். அதில் என் நூல்களை எல்லாம் இ-புக்ஸ் ஆக பெற ஏற்பாடு செய்து வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி செய்திகளையும் அதில் வெளியிட்டு வந்தேன். தற்போது நாங்களே எதிர்பார்க்காதவிதமாக எங்களுக்கு இந்த வெப்சைட்டுக்கு வாசகர்கள் கிடைத்துள்ளனர். ஆம். 39 நாட்டை சேர்ந்த 10,384 பேர் இந்த வெப்சைட்டை பார்த்துள்ளனர்.
45 நாள்களில் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. இதில் முதல் கட்டமாக என்னுடைய ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்னும் நூலை மும்பை செம்பூரில் இருந்து நமது வாசகர் விஸ்வநாதன் இ-புக்ஸ் வாங்கியுள்ளார்.
மொத்தத்தில் எனது எழுத்துப்பணி அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நன்கு அறிகிறோம். இதற்கு உதவியவர்களுக்கும் ஆதரவு தரும் உங்கள் அனைவருக்குமே நன்றி.
மேலும் இந்த வெப்சைட் மிக பிரமாதமாக மேம்பட உதவிவரும் அன்பு தம்பிகள் ராஜாராம், ராஜ்குமார், ஸ்ரீவைகுண்டம் டூடே நியூஸ் ஆசிரியர் சுடலைமணி செல்வன், உதவி ஆசிரியர் நந்தினி அவர்களுக்கு மிக்க நன்றி. அன்புடன் – முத்தாலங்குறிச்சி காமராசு