தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியை மாலதி. இவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தொடர்ந்து 365 நாள் தொடர்ந்து இணையவழி வகுப்பை மாணவர்களுக்கு நடத்திய வகைக்காக உலக சாதனைக்கான சோழன் புக் ரெக்கார்டில் பதிவாகி உள்ளார்.
இந்த சாதனையாளருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்த பள்ளியில் வைத்து நடந்தது.
நிகழ்ச்சிக்கு இணையம் வழியாக ராணி அண்ணா கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை வகித்தார். ஆவுடையப்ப குருகள் வரவேற்றார். சோழன் புக் ரெக்கார்ட் நிறுவனர் மற்றும் ஆசிரியர் டாக்டர் நிமலன் சாதனைக்கான விருதை ஆசிரியர் மாலதிக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கடம்பன்குளம் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, விவேகானந்தா பள்ளி முதல்வர் முருகவேல், ரோட்டரி சங்க தலைவர் சங்கர், தென்காசி யோகா மாஸ்டர் மருதுபாண்டி, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சியில் சிவகங்கை சிறுவன் ராகவ அய்யனார் உலக அளவில் தமிழர்களின் மாண்பு என்ற தலைப்பில் பேசினார். மூலைக்கரைப்பட்டி பள்ளி ஆசிரியயை நௌரோஜி நன்றி கூறினார்.