
சாத்தான்குளம் அருகே திருப்பணிபுத்தன் தருவை நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் தொடர்பாக ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் திருப்பணிபுத்தன் தருவை ஊராட்சிக்குட்பட்ட செட்டிவிளை பகுதியில் சடையனேரி கால்வாயிலிருந்து நீர்வரத்து பெறும் திருப்பணிபுத்தன் தருவை நீர்ப்பிடிப்புப் பகுதியினை முறைப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு, விவசாயிகளின் விளைநிலங்களுக்குத் தேவையான பாசன நீர் கிடைக்கக்கூடிய வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி இன்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.