தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் 77வது இந்திய குடியரசு தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் 77வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றினார். விழாவில் உதவி கோட்ட கண்காணிப்பாளர் ஹேமாவதி, தூத்துக்குடி தலைமை அஞ்சலக அதிகாரி பெரும்படையான், மற்றும் அஞ்சல் ஊழியர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
விழாவில், தேசிய சங்கீதமான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது மேலும் அஞ்சல் ஊழியர்களின் குழந்தைகள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதுபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் நிலையங்களிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.


