செய்துங்கநல்லூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பபட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா முன்னிலை வகித்தார்.
இதில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து மலர் தூவி கொண்டாடினர். மேலும் அங்கு இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் எண்ணாயிரத்தான், பேச்சிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிளைச் செயலாளர் கொம்பையா, மாவட்ட மாணவர் அணி கிளை செயலாளர் மருதவிநாயகம், ஒன்றிய பொறுப்பாளர் அரியமுத்து, ஊராட்சி செயலாளர்கள் திருவரங்கம், ராஜா, தர்மராஜ், பேச்சிமுத்து, சுடலை, பிச்சைக்கண்ணு, கிளை செயலாளர்கள் ஐயப்பன், பொன்ராஜ், பத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.