தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் தினமும் தொடரும் சர்வர் பிரச்சினை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பொருட்கள் பெற முடியாமலும் தினமும் அலைக்கழிப்பு செய்வதாக நியாய விலைக் கடை பணியாளர் மீது புகார் தெரிவிக்கின்றனர் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கைரேகை பதியாமல் பொருட்களை வழங்க கூடாது என்று உத்தரவு தெரிவித்து விட்டு சுற்றறிக்கைகள் எப்போது சென்றாலும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று உண்மைக்கு மாறான
தகவல்களை வெளியிடுவதால் பணியாளர்கள் மிகுந்த சிக்கலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி நியாய விலைக் கடைகளில் என்ன செய்வது என்று அறியாமல் பரிதவித்து வருகின்றனர் இந்தப்பரிதாப நிலைக்கு தமிழக முதல்வர் அவர்கள் மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தும் மாற்றுவழி தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலை தொடர்ந்தால் நியாய விலைக் கடையில் உள்ள பி.ஓ.எஸ் மெசினை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தும் நிலைக்கு ஆளாக்கி அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி விட வேண்டாம் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக வேண்டுகிறோம்.
ரா.வேலாயுதம்
மாவட்ட தலைவர்
அ.வேல்முருகேசன்
மாவட்ட செயலாளர்
தமிழ் நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை
தொழிலாளர் முன்னேற்ற சங்கம்
தூத்துக்குடி மாவட்டம்