ஆர். சி. சக்தி இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்மயுத்தம், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு, கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள், மற்றும் ராஜேஷ், லட்சுமி நடித்த சிறை ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர். சி. சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், சினிமாவில் ஆசையில் இருந்தார். இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக் கம்பெனியை துவங்கினார் சென்னை வந்த சக்தி, சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் நடன இயக்குனர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். 1972ஆம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. உணர்ச்சிகள் திரைப்படம் நடிகரான கமலஹாசனை உயரச்செய்தது.