சக்தி வாசுதேவன் பிறப்பு: 23 பிப்ரவரி 1983 தமிழ் நடிகராவார். இவர் இயக்குனரான பி. வாசுவின் மகனாவார். குழந்தை நட்சத்திரமாக பி.வாசுவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.
1991 ல் சின்னத் தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்தார். இப்படம் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படமாகும். நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்தார்.
2007ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நினைத்தாலே இனிக்கும் துணை நடிகராக நடித்தார்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் :ஆண்டு படம் கதாப்பாத்திரங்கள்,1991 சின்னத் தம்பி குழந்தை நட்சத்திரம்,1992 ரிக்சா மாமா குழந்தை நட்சத்திரம்,1992 செந்தமிழ் பாட்டு குழந்தை நட்சத்திரம், 1992 இது நம்ம பூமி குழந்தை நட்சத்திரம், 2007 தொட்டால் பூ மலரும் ரவி தியாகராஜன், 2008 மகேஷ் சரண்யா மற்றும் பலர் மகேஷ், 2009 நினைத்தாலே இனிக்கும் சக்தி, 2010 ஆட்டநாயகன் லிங்கம், 2011 கோ தானாக சிறப்புத் தோற்றம், 2011 யுவன் யுவதி சக்தி கௌரவத் தோற்றம், 2012 ஏதோ என்னை செய்தாய் அர்ஜூன், 2015 படம் பேசும், 2017 சிவலிங்கா ரஹீம் பாய்.