
தென் தமிழகத்தின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாச சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென் தமிழகத்தின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில். இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசைத்திருவிழா மற்றும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான தை அமாவாசைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அதிகாலை நடைதிறக்கப்பட்டது. அதன்பின்னர் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது.
பின்னர் கொடி பட்டம் கோவிலை சுற்றி வந்து, கோவிலில் உள்ள வெள்ளி கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
திருவிழா காலங்களில் விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு கோலங்களில் எழுந்தருளும் சப்பர பவனி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக 10ஆம் திருநாளான ஜன.31ஆம் தேதி தை அமாவாசை திருவிழா நடைபெறும். அன்றைய தினம் நண்பகல் 1 மணிக்கு உருகு பலகை தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சோ¢மன் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் சிகப்பு சாத்தி கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி உலாவும் நடைபெறும்.