
ஆழ்வார்திருநகரி யூனியனில் 166 பேர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை யூனியன் சேர்மன் ஜனகர் வழங்கினார்.
தமிழக அரசு ஏழை பெண்களுக்கு திருமணத்துக்கு தாலி மற்றும் திருமண நிதி உதவி வழங்கி வருகிறது. அதேபோல் தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் ஏழை பெண்களுக்கு திருமணத்துக்கு தாலி மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது.
ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார்.ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். மொத்தம் 166 பேர்களுக்கு திருமணதாலி மற்றும் திருமண நிதி உதவி வழங்கப்பட்டன.இதில் ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, சமுக நல விரிவாக்க அலுவலர் செந்தில்வேல், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.