நமது muthalankurichikamarasu.com வெப்சைட் ஆங்கில புத்தாண்டில் துவங்கி 12 நாள்களை கடந்து விட்டது. உலக தமிழர்களின் ஆதரவு நமது வெப்சைட்டுக்கு மிக அதிகமாகவே கிடைத்துள்ளது. நேற்று கணக்கின் படி 22 நாடுகளை சேர்ந்த 2,257 பேர் பார்த்துள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ், முத்தாலங்குறிச்சி காமராசு புக்ஸ் இரண்டையும் இணைத்து உங்களை சந்தித்து வருகிறோம்.
ஸ்ரீவைகுண்டம் பகுதி செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். இப்பகுதியில் வளர துடிக்கும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படைப்புகள் வரவேற்கப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் பகுதியில் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை பதிவிடுங்கள். தரமாக இருந்தால் வெப்சைட் பக்கத்திலும் பிரசுரம் செய்யப்படும். மற்றப்படி ஒருவரை ஒருவர் தாக்குவது, மதம் ஜாதி போன்ற பிரச்சனைகள் நமக்கு எதுக்கு நண்பர்களே. நமது பகுதியில் ஒளிந்து கிடக்கும் நல்ல எழுத்தாளர்களை வெளியே கொண்டு வரலாமே. முயற்சி செய்யுங்கள்.
எனது (முத்தாலங்குறிச்சி காமராசு) நூல்களை இ.புக்காக மாற்றும் பணி நடந்து கொண்டே இருக்கிறது. அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். வெப்சைட் விரிவாக்கத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் தலைமை செய்தியாளர் சுடலைமணி செல்வனுக்கும், வெப்சைட்டில் நூல்களை இ.புக்ஸ் ஆக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் மருமகள் நந்தினிக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள். உலக நாடுகளில் நமது வெப்சைட் பிரபலமாகவும் , எனது நூல்களை நேரில் வந்து வாங்க முடியாதவர்கள் இ.புக்ஸ் மூலமாக வாங்கவும் உதவுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
(முத்தாலங்குறிச்சி காமராசு)