
தூத்துக்குடியில் புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினியை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள், “அரசு பொதுத்தேர்வு பணிகளில் பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் செய்திடவேண்டும். பொதுத் தேர்வுகள் ஒளி மறைவின்றி நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டும், மாவட்ட அளவில் நடைபெறும் தேர்வுகளில் குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும், கடந்த 4 ஆண்டுகளாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணங்கள் குறித்த கணக்கு ஆய்வு செய்து அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்க வேண்டும், கல்வி சார்ந்த நிகழ்வுகளில் தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று மாவட்ட கல்வித் துறை இணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சீனி, மாவட்டச் செயலாளர் கஜேந்திரபாபு, மாவட்டப் பொருளாளர் கார்த்திகேயன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வானரமுட்டி செல்லத்துரை, வில்லிசேரி வெங்கடேசன், ஊத்துப்பட்டி ராஜமாணிக்கம், ஒட்டப்பிடாரம் மேரி, முடிவைத்தானேந்தல் கிறிஸ்டி, தூத்துக்குடி சிவ பெர்சியாள், பாரதியார் வித்யாலயம் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகநேரி கேஏ பள்ளி கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் சேகர் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.