
9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் விரோதபோக்கை கண்டித்தும், கேஸ் விலை உயர்வு, எஸ்பிஐ வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ததை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பஜாரில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.