
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் கருங்குளம் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கடந்த ஒர் ஆண்டாக செயல்பட்டு வருகிறது.
இந்த மன்றம் பதிவு செய்வதற்கு கடந்த டிச.21ம் தேதி ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களிடம் பாத பூஜை செய்து மன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆசி பெற்று பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜன.23ம் தேதி அம்மா அருளிய முறைகளின்படி சக்தி மாலை அணிந்து இருமுடிகட்டி வழிபாடு நடைபெற்று வந்தன. 26ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மன்றத்தில் உள்ள 2 ஓம்சக்தி விளக்குகள், 1 காமாட்சி விளக்கை சக்தி. சீதா ஏற்றிவிட்டு அருகிலிருந்த புதியதாக மாலை போட்டு வந்த சக்தி லெட்சுமியை எண்ணெயை ஊற்றச் சொல்லிவிட்டு சென்றார். அந்த சக்தி எண்ணெய்க்கு பதிலாக தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இருந்து வாங்கிச் சென்ற பாட்டிலில் இருந்த கலச நீரை தெரியாமல் 3 விளக்குகளிலும் ஊற்றியுள்ளார்.
இதனைக் கண்ட சக்தி சீதா, “ஐயோ, அது அம்மாவின் தீர்த்தமல்லா” என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லெட்சுமி அம்மாவின் முன் மண்டியிட்டு ஐயோ, “அம்மா தவறு நடந்துவிட்டது தாயே மன்னித்துவிடு” என்று அம்மாவிடம் மானசீகமாக வேண்டியுள்ளார்.
எண்ணெய்க்கு பதிலாக கலச தண்ணீர் விட்டும் விளக்கு அனையாமல் எரிந்துள்ளது கண்டுமன்ற தலைவி சக்தி சங்கர ஈஸ்வரி உள்ளிட்டோர் அதிசயமடைந்தனர். அம்மாவின் இந்த அதிசயம் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பரவ பொதுமக்கள் நேரில் பார்த்து அதிசயப்பட்டனர்.
காலை 9.00 மணியில் இருந்து மாலை 7.00 மணிவரை 3 விளக்குகளும் எண்ணெயே ஊற்றாமல் எரிந்தது என்றால் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கூறும் பழமொழியை பறை சாற்றிய பங்காரு அம்மாவின் அற்புதமல்லவா.