
நெல்லை மண்ணின் மைந்தனுக்கு தலைநகர் டெல்லியில் பாராட்டு விழா நடந்துள்ளது. அவரின் சொந்த ஊர் முன்னீர் பள்ளம் என்றால் நமக்கு மற்றுமொரு பெருமையாகி விட்டது.
நெகிழி கழிவுகளை உருமாற்றி அதன் மூலம் மின்சாரத்தை உருவாக்கி செயல் வடிவம் கொடுத்ததற்காக நெல்லை மாவட்டம், மேலமுன்னீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி மு.இசக்கிப்பாண்டியன் அவர்களுக்கு தலைநகர் டெல்லியில் இந்திய அறிவியல் முதன்மை ஆலோசனை அலுவலகத்தில் முதன்மை ஆலோசகர் அஜய்குமார் மற்றும் டாக்டர்.மோனோரஞ்சன் மொஹந்தி ஆகியோர்களால் விருது வழங்கப்பட்டது. இந்த பதவியில் முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல் கலாம் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இசக்கிப்பாண்டியன் மற்றொரு சாதனைக்காக கடந்த மாதம் மேற்கு வங்கத்திலும் ஒரு போட்டியில் கலந்து கொண்டார், தொடர்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க அவரை வாழ்த்துகிறோம். இவர் எனது நண்பரும் கால்வாய் பரணி அறக்கட்டளை நிறுவனருமான கால்வாய் சிவா என்பவரின் மைத்துனர், எனவே அவர் மூலமாக நான் இசக்கி முத்து அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.
என் பெயர் மு.இசக்கிமுத்து நான் திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள மேல முன்னீர்பள்ளம், கிராமத்தை சேர்ந்தவன். என் பெற்றோர் பெயர் முத்துக்குமார்-&சண்முக சுந்தரி ஆகும் எனது பெரியப்ப முப்பிடாதி & முத்துலெட்சுமி ஆகியோர் தான் என்னை வளர்த்தனர். நான் எனது தொடக்க கல்வியை கோவில்பட்டியில் உள்ள “புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக்“ பள்ளி பயின்றேன் மேலும் உயிர்நிலை கல்வியை Ôஇலங்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். மேலும் நான் பி.எஸ்.பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து வருகிறேன் நான் தொடக்ககல்வி காலத்திலே இருந்து அறிவியல் கண்டுபிடிப்புகள் மிது ஆர்வம் கொண்டு இருந்தேன். அதற்கு முக்கிய காரணம் என் தந்தை முத்துகுமார்.
பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கு நானும் என் தந்தையும் இனைந்து பல செயல்பாட்டுகளை செய்துள்ளோம் மேலும் என் உயர்கல்வின் போது மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துள்ளேன் பின்னர் எனது முதலாமாண்டு பொறியில் படிக்கும் போது மின்னனுவியல் மீது ஆர்வம் கொண்டேன் மேலும் அதில் பல சாதனங்களை கண்டுபிடித்துயுள்ளேன். கோவிட் 19 தொற்று நோய் காலத்தின் போது தானியங்கி கைசுத்திகரிப்பு மற்றும் வெப்பநிலை கண்கானிப்பு கருவி கண்டுபிடித்து என் கல்லூரியில் செயல்பாட்டில் வைத்துள்ளேன் இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் (பிஎஸ்ஏ) இன்வெஸ்ட் இந்தியாவுடன் இனைந்து அதன் Ô வேஸ்ட் டூ வெல்த்மிஸன் மூலம் Ô ஸ்வச்த சார்த்தி பெல்லோஷிப்Õ (எஸ்.எஸ்.எப் ) ஐ 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . இதன் முழு நோக்கம் கழிவு மேலாண்மை, கழிவுகளிலிருந்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவது . அதன் அடிபடையில் 2021ம் ஆண்டு இந்திய குடிமக்களிடம் இருந்து புதிய திட்ட யோசனை வரவேற்றது . இது என் கல்லூரி மூலமாக நான் அறிந்தேன் .
இதன் மீது எனக்கு ஈர்ப்பு எற்பட்டது பல நாள் கழிவுகள் பற்றியும் கழிவு பேலன்மைபற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் . பின்னர் Ô பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்திசெய்யும் Ô யோசனை வந்தது அதனை எஸ்.எஸ்.எப் குழும்பத்திற்கு தெரிய படுத்துனேன். அதனை அவர்கள் தங்கள் குழு மூலம் மதிப்பீடு செய்து தெர்ந்தெடுத்தனர் மேலும் மாதம் 1000 ரூபாய் விகிதம் ,வருடத்திற்கு 12,000 ரூபாயை எனது திட்ட யோசனையை ஒரு தயாரிப்பாக உருவாக்க நிதி வழங்கினார்கள் . நான் ஓராண்டு காலம் இந்த ஆராயிச்சியில் ஈடுபட்டு Ôபிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தேன் இதற்கு எனது கல்லூரி நிருபர் சோலைசாமி , இ.சி.இ துறையின் தலைவர் முனைவர் வளர்மதி , பேராசிரியர் முனைவர் கருப்பசாமி , முனைவர் விமலா மற்றும் மதினா ஆகியவர்கள் உதவி புரிந்தனர்
எனது நண்பர்கள் ரோகித், ஆரோக்கிய ஜெயபிரகாஷ், கவியரசன், அய்யனார் ஆகியோர் உறுதுனையாக இருந்தனர் . மேலும் எனது மைத்துனர் கால்வாய் சிவா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஊக்கவித்தனர் .
அக்டோபர் 1ஆம் தேதி தலைநகர் டெல்லியில் வைத்து எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது அதில் இந்திய முதன்மை அறிவியல் அலோசகர் அஜய்குமார், டாக்டர்மோனோரஞ்சன் மொஹந்தி (ஆலோசகர், இந்திய முதன்மை அறிவியல் ஆலோசகர்அலுவலகம் )ஆகியேர் கரங்களினால் எஸ்.எஸ்.எப் விருது வழங்கி கௌரவப்படுத்தபட்டேன். என்று என்னிடம் கூறினார்.
இந்த நிகழ் காலத்தில் கூட சாதனை புரிந்த தாமிரபரணி கரை மைந்தன், முன்னீர் பள்ளம் இளம் விஞ்ஞானி மேலும் மேலும் புகழ் சேர்க்க வேண்டும் என வாழ்த்து முன்னிர் பள்ளத்தில் நடந்த மற்றுமொரு சம்பவத்தினை அசைப்போட கிளம்பினோம்.
(நதி வற்றாமல் ஓடும்)