
கருங்குளம் ஒன்றியத்தில் கொங்கராயகுறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் புதிய பாரத எழுத்து திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள கொங்கராயகுறிச்சி, மேலநாட்டார்குளம், ஆலந்தா உள்பட பல்வேறு பகுதிகளில் புதிய பாரத எழுத்து திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அனைத்து பகுதி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும், மாணவர்களும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களும் பேரணியில் கலந்து கொண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 15 வயதிற்கும் மேற்பட்ட எழுதவும் வாசிக்கவும் தெரியாத நபர்கள் கலந்துகொண்டு பயன் பெற ஏதுவாக இணைவோம் இணைவோம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் இணைவோம் என்று கோஷங்களை எழுப்பியவாறு வீதி வீதியாக சென்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு துண்டு பிரதி வழங்கியும் அனைத்து குடியிருப்புகளுக்கும் சென்றனர் குடியிருப்பில் வசிக்கும் எழுத படிக்க தெரியாதவருக்கு இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டது. 30 குடியிருப்புகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை கருங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் முத்துக்குமார் மரிய ஜெயசீலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், புதிய பாரத எழுத்தறிவு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரிய பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வெயில்முத்து ஆகியோர் கலந்து கொண்டு ஒழுங்கு செய்திருந்தனர்.