
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த பேரணிக்கு சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் வாக்காளர் உறுதி மொழியை வாசித்து, பேரணியை துவக்கி வைத்தார். பேரணி இந்தியன் வங்கி முன்பு தொடங்கி காவல்நிலையம் முன்பு நிறைவடைந்தது.
பேரணியில் மண்டல துணை வட்டாட்சியர் சுடலைவீரபாண்டியன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், காவல் ஆய்வாளர் பத்மநாபன் பிள்ளை, உதவி ஆய்வாளர் அஜய்குமார், வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, தலையாரி சோமசுந்தரம், செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், ஆசிரியர்கள் கண்ணன், சுடலைமணி, சிவசுப்பிரமணியன், ஹைதர் அலி, சமூக ஆர்வலர் சுடலைமுத்து, தோழர் மணி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 50க்கும் கலந்து கொண்டனர்.