
கிராம உதயம் கிளை அலுவலகம் மேல ஆழ்வார் தோப்பு சார்பாக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் இணைந்து மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி மதிப்பிற்குரிய திருமதி உமாமகேஸ்வரி அம்மையார் அவர்கள் தலைமை வகித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட சார்பு நீதிபதி மதிப்பிற்குரிய ப்ரீத்தா அம்மா அவர்கள் மற்றும் கிராம உதயத்தின் நிறுவன இயக்குனர் டாக்டர் V.சுந்தரேசன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கிராம உதயத்தின் கிளை மேலாளர் A.வேல்முருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
விழாவில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, ஊனமுற்றோர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை என்னும் அனைத்து துறைகளும் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய நலவாரிய அட்டைமற்றும் மரக்கன்றுகள் கிராம உதயம் மஞ்சள் பைகள் வழங்கியபோது எடுத்த படங்கள்.