
நான் எழுதிய “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள்” நூல் விமர்சனம் தமிழகம் முழுவதும் தினமலர் நாளிதழிலில் வெளி வந்துள்ளது. நூல் விமர்சனம் செய்த திரு ராம் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாகத்துக்கும் மிக்க நன்றி. நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு வெளியீடு: மாவட்ட நிர்வாகம், துாத்துக்குடி. அலைபேசி: 87609 70002 பக்கம்: 586
விலை: ரூ.550
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெளி உலகம் அறியாத தியாகிகள் குறித்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல். துாத்துக்குடி மாவட்ட பகுதியில் நடந்த போராட்ட வரலாற்றுச் சுவடுகளை கண் முன் நிறுத்துகிறது.
மாவட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் துவங்குகிறது. அங்கு நடந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தொகுத்து சம்பவங்களுடன் விவரிக்கிறது. அறியப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் என, 12 பேரையும், அறியப்படாத வீரர்கள் என பலரையும் அறிமுகம் செய் கிறது. உரிய ஆதாரங்களை திரட்டி பதிவு செய்துள்ளது.
தியாகிகள் பட்டியலில் இடம் பெறாதவர்களையும், குறிப்பிட்ட ஒரு பகுதியில் அதிகம் பேர் போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்ததையும் வரலாற்றுப்பூர்வ மாக தெளிவாக உரைக்கிறது. இறுதியில் புகைப்பட ஆல்பம் ஒன்றும் உள்ளது.
வட்டார அளவில் சுதந்திரப் போராட்டத்தின் உண்மையை விவரிக்கும் நூல்.
– ராம்