
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் முஸ்லீம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கேத்தரபாலன். இவரது மனைவி மீனாட்சி.
கடந்த 2 தினங்களாக செய்துங்கநல்லூர் பகுதியில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வந்ததது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மேற்கூரை திடிரென இடிந்து விழுந்துள்ளது. இதில் மீனாட்சியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கேத்தரபாலன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
வீடு இடிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீனாட்சியையும் அவரது கணவரையும் மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீட்டை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மீனாட்சிக்கு அரசு வழங்கும் ரூபாய் 5000 ஆயிரம் நிவாரண உதவியை வட்டாட்சியர் வழங்கினார்.
அவருடன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாண்டிராஜன், வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அதிகாரி ராமசாமி, கிராம உதவியாளர் சோமசுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.