
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது,
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 விதம் ஆண்டுக்கு ரூபாய் 6000 வேளாண் இடுபொருள்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகை வரப்பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள் ekyc (PM Kisan Yojana) என்கிற இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தொடர்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்து அவசியமாகும். அருகாமையில் உள்ள இ சேவை மையத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ அணுகி ekyc செய்து கொள்ளலாம். மேலும் தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிஎம் கிஷான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓடிபி மூலம் சரிபார்த்து செய்து கொள்ளவும். கருங்குளம் வட்டாரத்தில் பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களது ஆதார் விவரங்களை உடனடியாக பிஎம் கிஷான் திட்ட வலைதளத்தில் பதிவு செய்து தொடர் தவணைகள் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.