
“மனித குலத்தில் மறக்க முடியாத ஓர் மா – மனிதர், முக்கூடல் சொக்கலால் பீடிக் கம்பெனி அதிபர், திரு. த.பி.சொ. அரிராம் சேட் அவர்கள்!
ஒரு முறை, பெருந் தலைவர் அய்யா காமராசு அவர்கள் நெல்லைக்குச் சுற்றுப் பயணம் வந்த போது , முக்கூடலுக்கும் வந்திருந்தார்!, அப்போது அவர் தமிழ் நாடு முதல்வராக வீற்றிருக்கும் காலம்!,
முக்கூடல் நகர் முழுமையும் ஓர் சிறப்பான வரவேற்புக் கொடுத்து அய்யா காமராஜர் அவர்களுக்குச் சிறப்புச் சேர்த்தார்கள்!…,
அதன் போது, ….காமராசர் அவர்கள் சொன்ன வைர வரிகள்…!,
“முதலாளிகள் என்ற பெயரில் எத்தனையோ பேர்கள் இருப்பார்கள்; ஆனால், உங்களைப் போல், தொழிலாளர்கள் மீது அன்பும் அரவணைப்பும் கொண்ட முதலாளிகளை
எங்கேயும் பார்க்க முடியாது!…,என்று, அய்யா த.பி.சொ. அரிராம் சேட் அவர்களை , அய்யா பெருந் தலைவர் காமராஜர் அவர்கள் பாராட்டிய விதம், உலகில் எந்த மனிதருக்கும் கிடைத்திராத ஓர் சிறப்போவியம்!
தாம் காணும் காட்சிகளை தமது தொழிலாளர்கள் முதல், முக்கூடல் ஊர் மக்களுக்கு காண வேண்டும் என்பதில் மிகவும் பேரவா கொண்டவர், திரு .அரிராம் சேட் அவர்கள்!
நெல்லை பொருட் காட்சி நிகழ்ச்சி களுக்கு வரும் சினிமா நடிகர்களின் நாடகங்களை நமது ஊர் மக்களும் பார்க்கட்டும்!, என்பதற்காக, முக்கூடல் முத்துமாலையம்மன் கோவில் திருவிழாவுக்கும், நாறாயண சாமி கோவில் திருவிழாவுக்கும் அழைத்து வந்து, நாடகம், கச்சேரி, நாட்டியம், என ,
பல் வேறு நிகழ்ச்சிகளை இவ்வூர் மக்களுக்காக ஏற்படுத்துபவர்….மரியாதைக்குரிய திரு அரிராம் சேட் அவர்கள்!
கவிஞர் சிற்பி பாமா