
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைண்டம் சரகத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் தாய் தந்தை ஆதரவின்றி பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்து வரும் ஏழைச் சிறுமி ஒருவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5வது படித்து வந்த நிலையில் போதிய பண வசதி இல்லாமல் அவரது பாட்டி படிப்பை நிறுத்தியுள்ளார்.
இதையறிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மேற்படி சிறுமியை தனது சொந்த செலவில் அதே பள்ளியில் சேர்த்து போதிய பண உதவி மற்றும் படிப்புக்கு தேவையான புத்தகங்களையும் வாங்கி கொடுத்து தொடர்ந்து படிப்பதற்கு உதவியுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறுமியின் படிப்புக்கு உதவி செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.