
பனை பொருள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின், மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம், தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறை ,மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பு கிராமத்தில் சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்
இதில் நலிவடைந்து வரும் பனை தொழிலை பாதுகாக்க வேண்டும். பனை தொழிலை மேம்படுத்த,பனை தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டு வரும் வறுமையை ஒழிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் மேலும் பனையை பாதுகாக்க வேண்டும். செங்கல் சூலைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் தானாக முன்வந்து பனை விதைகளை விதைக்க வேண்டும். மேலும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் உதவி பெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவணங்கள், பயனாளிகள் தேர்வு, திட்ட அனுமதி வங்கி கடன் தொகை, தொழில் முனைவோர் பயிற்சி, சொந்த முதலீடு, மானியம், விண்ணப்பிக்கும் முறை , விற்பனை உதவி தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள், வனம் சார்ந்த தொழில்கள், கைமுறை காகிதம் மற்றும் நார்ப்பொருட்கள் சார்ந்த தொழில்கள், வேளாண் சார்பு மற்றும் உணவுப் பொருட்கள் சார்புத் தொழில்கள், பாலிமர் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், பொறியியல் மற்றும் மரபுசாரா எரிசக்தி சார்ந்த தொழில்கள், சேவை மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில்கள், தகுதியற்ற தொழில்கள் பட்டியல், இரண்டாம் முறை கடன் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்புகளில் விரிவான விளக்கமான விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் கலந்துகொண்டு குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு என்றால் என்ன? குழந்தைகள் பாதிக்கப்படும் சூழ்நிலைகள், குழந்தைகள் புறக்கணித்தல், மனரீதியாக தீங்கிழைத்தல், எத்தகைய சூழலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உளவியல் மற்றும் சமூக (தலையீடுகள்) வழிகாட்டுதல், குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் எதற்காக கடத்தினார்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு, குழந்தைகள் கடத்தப்படுவதற்கான காரணங்கள், குழந்தைகள் திருமணம், குழந்தை திருமணம் என்றால், குழந்தை திருமணத்திற்கான காரணங்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பின்விளைவுகள், குழந்தை திருமணத்தை பற்றி யாரிடம் புகார் தெரிவிக்கலாம், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த யாருக்கு அதிகாரம் உண்டு, சட்டம் என்ன சொல்கிறது, குழந்தைத் திருமணச் சட்டம் 2006 இன் படி, குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 குற்றம் செய்ததாக கருதப்படுவார், குழந்தை தத்து நோக்கம், மத்திய தத்து வள ஆதார மையம், மாநில தத்து வள ஆதார மையம், தத்தெடுத்தலுக்கான வழிமுறைகள், யாரெல்லாம் தத்து எடுக்கலாம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், யாரால் பாதிக்கப்படுகின்றனர், இச்சட்டத்தின் அம்சங்கள், தண்டனைகள், ஆபாச படங்கள் வியாபார நோக்கில் சேமித்து வைப்பதற்கான தண்டனைகள், குற்றம் புரிவதற்கு முயற்சி செய்ததற்கான தண்டனைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், குழந்தைகளின் பாதுகாப்பு வளையத்தை உருவாக்ககுவதில் பங்கு பெறும் துறைகள்,
என்ற தலைப்புகளில் சிறப்பாக கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில் சுமார் 200க்கும் மேற்பட்ட பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக மதர் சமூக சேவை நிறுவனம் அமைப்பாளர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். முடிவில் பணம் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் மல்லிகா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்