
1876 ல் முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் டாக்டர் ஜகோர் ஆய்வு செய்த போதே இங்கு அருங்காட்சியகம் அமைகக வேண்டும் என்று நினைத்தார். அதே போல் 1902 அலெக்ஸாண்டர் இரியாவும், 2004 ல் டாக்டர் சத்திய மூர்த்தியும் நினைத்தார்கள். ஆனால் இந்த கனவு 146 வருடம் கழித்து தற்போது நிறைவேறியுள்ளது. ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் நிதி உதவி அளித்த மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், பல்வேறு தூண்டுதல்கள் செய்து ஓதுக்கீடு பெற்று தந்த எம்.பி கனி மொழி கருணாநிதி அவர்களுக்கும், இடம் தேர்வு செய்ய அயராது உழைத்த மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில்ராஜ் அவர்களுக்கும், உலக தரம் வாய்ந்த அருங்காட்சிய பணியை செவ்வன செய்யும் இயக்குனர் அருண்ராஜ் மற்றும் அவர்களின் குழுவினருக்கும். இடத்தினை இலவசமாக இந்திய தொல்லியல் துறைக்கு தந்து உதவிய ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் குடும்பத்தாருக்கும் உலக தொல்லியல் ஆர்வலர்கள் சார்பில் நன்றி.
இதற்கான பத்திரங்களை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அவர்கள் வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று ஆதிச்சநல்லூரில் நடந்தது.
திருச்சி மண்டல இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் முனைவர் அருண் ராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் சு. இராஜவேலு, மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு), ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் வரலாற்றுத் துறை ஆசிரியர் மாணிக்கம் , ஓய்வு பெற்ற ஐ.ஜி. மாசான முத்து, தடவியல் துறை முன்னாள் இயக்குனர் விஜயகுமார், சப் கலெக்டர் சிவசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஸ்ரீவைகுண்டம் ஆணையாளர் சுரேஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சிறப்பு விருந்தினர்களை கவுரவ படுத்துதல் மற்றும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்திற்கான மூலப்பத்திரம் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. அந்த சமயத்தில் தொல்லியல் துறையினரும், ஆதிச்சநல்லூர் தமிழ்சங்கமும், ஆதிச்சநல்லூர் பொதுமககளும் உதவி புரிந்தவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் , வழககறிஞர்கள் என அனைவருககும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
வித்தியாசமாக கருங்குளம் பால்பாண்டி என்னும் பனை தொழிலாளி ஓலையால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழியை மாவட்ட ஆட்சி தலைவருக்கும் , திருச்சி மண்டல இயக்குனருக்கும் வழங்கி னார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் கல்லூரி , பாளை ஜான்ஸ் கல்லூரி, பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை தமிழ்த்துறை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு அருங்காட்சியகம் கட்டும் பணி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்காக உழைத்த நீதி துறை, பத்திரிக்கை துறை , மத்திய மாநில அரசு தொல்லியல் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு