
எஸ்.என். சோமையாஜூலு, ஆத்தூர்
எஸ்.என்.சோமையாஜூலு இவரது பூர்வீகம் ஆத்தூர். வெள்ளையரை எதிர்த்து போராடியவர். ஆங்கிலேயரின் ஆயுத வைப்புச் சட்டத்திற்கு எதிராக 1927 ஜூன் 16இல் அச்சட்டத்திற்கு எதிராக மதுரையில் 21/2 அடிநீள வாளுடன் பேரணி.
புண்ணிய பூமியாம் காசியில் 1857இல் ஆங்கிலேயன் கர்னல் நீலன் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர் களைக் கொன்று குவித்தார். அவருக்கு சென்னை மௌண்ட் ரோட்டில் சிலை வைத்ததை எதிர்த்து 1927 ஆகஸ்ட் 11 இல் சிலை மீது ஏறி அதன் ஒரு பகுதியை கோடாரியால் உடைத் தெறிந்தனர். அவரது நண்பர்கள் முகமது சாலி, சுப்புராயலு உறுதுணையானார்கள்.
1930இல் செக்ஷன் 3 ஆகஸ்ட் 22/1922இன்படி கடலூர் சிறையில் 6 மாதம் 20 நாள் சிறைவாசம். ஐ.பி.சி 124 ஏ இன் கீழ் மதுரைச் சிறையில் 3 வருடம். 1932இல் ஐ.பி.சி 147இன் படி மதுரை, கடலூர் சிறைகளில் 2 வருடம் 10 மாதம். 1940இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வேலூர்.சென்னை சிறைகளில் 7 மாதம் 26 நாள் சிறை. 1942இல் பாதுகாப்பு கைதியாக 2 வருடம் மொத்தத்தில் 10 வருடம் 2 மாதம் 15 நாட்கள் தண்டனை விதிப்பு. 6 வருடம் 7 மாதம் 26 நாள் தண்டனையை அனுபவித்தார். சட்டமன்ற உறுப்பினராகச்சேவை செய்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சங்கத்தைத் தொடங்கிய பெருமைக்குரியவர்.
எஸ்.டி.ஆதித்தன். காயாமொழி
காயாமொழி சிவந்தி ஆதித்த நாடாரின் புதல்வர். இவரது இயற்பெயர் தையல்பாக ஆதித்தன். 1941 இல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு திருச்செந்தூரில் கைது ஆனார். தூத்துக்குடி சப்டிவிசனில் மாஜிட்டிரேட்டால் 4 மாதம் கடுங்காவல் தண்டனை விதிப்பு. தொடர்ந்து கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் கடுங்காவல் தண்டனை.
சட்டம் படித்த இவர், தமது ஆற்றலால் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மத்திய சட்டசபை உறுப்பினராக 1945 முதல் 1947 வரையும், சென்னை சட்டசபை உறுப்பினராக 1952 முதல் 1957 வரையிலும். தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக 1958 முதல் 1964 வரையிலும், 1970 முதல் 1975 வரையும் இருந்து மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகப் பணியாற்றிய சிறப்பைப் பெற்றவர். நாளிதழ் நிறுவனர்.