
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் ராஜா. இவர் கருங்குளம் பகுதியில் வாழை பயிரிட்டுள்ளார். இந்த வாழை பயிர் தண்ணீரில் மூழ்கி இருந்தது. எனவே வாழை குலையை வெட்டி தண்ணீருக்குள் இழுத்து பல கிலோ மீட்டர் தாண்டி கொண்டு வந்தார். இந்த வீடியோவை சமூக வளைதளத்தில் பதிவிட்டு, தன்னை போன்ற விவசாயிகள் இதுபோன்ற பாதிக்கப்பட்டுள்ளனர் . நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த படத்தினை கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் பார்த்தார். உடனே அவர் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும் படிகேட்டுக்கொண்டார். அதை பார்த்த செந்தில் ராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க அறிவுருத்தினார். அதன் படி பாதிக்கப்பட்ட மூக்கனை கருங்குளத்தில் வைத்து ஸ்ரீவைண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அவரிடம் பாதிப்பு குறித்து மனு பெற்று கொண்டார். அவருடன் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் உடனிருந்தார்.
சமூக வளைதலத்தினை பார்த்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்து கருங்குளம் ஒன்றிய சேர்மனையும் , நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சி தலைவரை விவசாயிகள் பாராட்டினார்கள்.