
கிளாக்குளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெங்கிடாசலபதி கோயிலில் வைக்கப்பட்டடுள்ளனர். இதை பற்றி கேள்விப்பட்ட கனிமொழி எம்.பி அவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்க ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் குமார் ஆலோசனை படி இந்த பொருள்கள் கிளாக்குளம் மக்களுக்கு வழங்கப்பட்டது. பாய், போர்வை உள்பட பல பொருள்கள் வழங்கப்பட்டது. பொருள்களை கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி மணிமாலா, எண்ணாயிரத்தான், தலையாரி கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.