
ஸ்ரீவைகுண்டம் கனியான் காலனியில் முழங்கால் தண்ணீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழையால் ஏராளமான பகுதிகளில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கனியான் காலணியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை அனைத்தும் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இதனால் ஆற்றின் நீர் நீரூற்றாக இந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், தற்போது வரை யாரும் வந்து பார்க்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.