
செய்துங்கநல்லூரில் கனமழை பெய்தது. இதனால் வாரச்சந்தை ஸ்தம்பித்தது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழை பொழிந்து வருகிறது. இதனால் பாவநாசம் மேலணை நிரம்பி விட்டது. அதோடு மட்டுமல்லாமல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கட்டில் தண்ணீர் திறக்கப்பட்டு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று காலை புதன்கிழமை வாரச்சந்தை செய்துங்கநல்லூரில் துவங்கியது. சரியாக 12 மணியில் சரியான மழை இப்பகுதியில் பெய்தது. இந்த மழையால் சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள் வாரதா காரணத்தினால் சந்தை வெறிச்சோடியது. ஆனாலும் கன மழை காரணமாக விவசாயங்கள் நடைபெற ஏதுவாக இருக்கும் . அதே வேளையில் பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது. நெற்பயிர்கள் மழையில் நனைந்த காரணத்தினால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.