
கல்வி, சமூக மற்றும் சமுதாய தொண்டாற்றிய தூத்துக்குடி மறைமாவட்ட அருட்தந்தை சேவியர் இக்னேஷியஸ் நேற்று காலமானார். அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.
அருட்தந்தை சேவியர் இக்னேஷியஸ் ரெத்தினசாமி பிள்ளை, மரிய செல்வம் அவர்களுக்கு மூத்த மகனாகிய 1920ம் ஆண்டு நவ.3-ந்தேதி திசையன்விளை அணைக்கரை பங்கில் பிறந்தார். இறை அன்பிள் ஆர்வம் கொண்டு கத்தோலிக்க கிறிஸ்துவ சபையில் குருவாக பயிற்சி பெற்று லெத்தின் மொழியில் சிறந்து விளங்கினார். அந்த காலத்தில் குருத்துவ பட்டம் பெறவேண்டும் என்றால் ஸ்ரீலங்கா நாட்டில் உள்ள கண்டி ஊரில் உள்ள பங்கில் உள்ள தேவாலயத்தில் குருத்துவம் பட்டம் பெற்றார். லத்தின், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச், மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கினார்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு ஜெப புத்தகங்கள், நீதிபோதனைகள் சித்திர வடிவில் இயேசு நாதரின் இறை போதனைகளை மாணவ-மாணவிகள் எளிதாக கற்கும் வகையில் வரைபடத்துடன் புத்தகத்தை இயற்றி கிறிஸ்துவ வளர்ச்சிக்கு தன்னான பங்கை ஆற்றியவர். இறையன்பில் மக்களை நல்வழிப்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரோம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய மேலநாடுகளில் இறைப்பணி செய்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் குணமாக சிறப்பு பிரார்த்தனை செய்து ஆண்டவரின் போதனைகளை போதித்து வந்தார்.
இவரது இறைப்பணியால் கிறிஸ்துவில் அன்பு கொண்டு பல இளைஞர்கள், இளம்பெண்கள் இயேசுவின் அன்பை பெற்று குருத்துவ பட்டத்தை பெற்றார்கள். அருட்தந்தை சேவியர் இக்னேஷியஸ் சேவையை பார்த்து பல அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் குருத்துவ பட்டம் பெற முன்வந்தார்கள். அருட்தந்தை சேவியர் இக்னேஷியஸ் பரமகுறிச்சி, சோமநாதபுரி, திசையன் விளை, பாத்திமா நகர், பங்குகளில் அருட்தந்தையராக பணியாற்றினார். மேலும் அணைக்கரை பங்கில் முதன்மை குருவாவும் இறைபணியாற்றினார்.
இவரது பணி காலங்களில் ஏழை எளிய மக்கள், ஊனமுற்றோர், கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் அவர்களை அரவணைத்து அவர் களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காண பல உதவிகளை செய்து வந்தார். இவர் மீது அன்பு கொண்ட மக்கள் இவரது பெயரை நிலை நிறுத்தும் வகையில் அந்த பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைத்துள்ளார்கள். ஏழை-எளிய குடும்பத்தில் உள்ள கல்வி கட்டணத்தை இவரே வழங்கி அவரது வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளார். உயர் கல்வி படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவ, மாணவிகளை அவர்களது தேவையை அறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துவந்தார்.
அருட்தந்தை சேவியர் இக்னேஷியஸ் 70 ஆண்டுகள் சிறப்பான முறையில் குருத்துவ பணியை நிறைவு செய்ததன் காரணமாக ரோமில் உள்ள வாடிகான் உள்ள மேதகு போப் பிரான்சியஸ் அவர்கள் வாழ்த்து கடிதம் அனுப்பினார். வயதான காலங்களிலும் திருப்பலியை நிறைவேற்றி மக்களுக்கு நல்ல கருத்துகளை தெரிவிப்பதில் முதன்மை பணியாக கொண்டவர். வெள்ளம்-புயல் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரிடையாக சென்று உதவி செய்தவர். ஒவ்வொரு பேராயரும் இவர் மீது அன்பு கொண்டு இவர் பணி தொடர உற்சாகம் உதவி செய்தார்கள்.
சிறு வயது முதல் கிறிஸ்துவ மதத்தில் ஈர்ப்பு கொண்டு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கிறிஸ்துவ மக்களின் கல்வி, சமூக சமுதாய பணிகளை மேற்கொண்டு வந்த அருட்தந்தை சேவியர் இக்னேஷியஸ் உடல் நல குறைவால் நேற்று (19.10.2021) மாலை தனது 100வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். அவரது உடல் தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இல்ல வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலிக்குபின் பாத்திமா நகர் பங்கு கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சேவியர் இக்னேஷியஸ் மறைந்தாலும் அவரது சமூக, சமுதாய கல்வித் தொண்டு என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.