
திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை அரிஸ் ஹோட்டலில் நடந்த திருநெல்வேலி ரோட்டரி சங்க வாரந்திரா கூட்டத்திற்கு ரோட்டரி தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் அண்டோ ஜோ.செல்வக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி கரையில் தொல்லியல் களங்கள் என்ற தலைப்பில் பேசினார். அதன் பின் அவருக்குச் சிறப்பு எழுத்து சேவைக்கான விருதை வழங்கினர். முன்னாள் தலைவர்கள் பரமசிவன், ஆண்டனி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மெல்ஷிபோ, ரமணி, முரளிதரன், சங்கர் நாயகம், ஜனார்த்தனம், கமாக் புலவேந்திரன், கார்த்திக் சங்கர விநாயகம், செய்துங்கநல்லூர் நூலகர் லெட்சுமணன், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து, கோபால், சுடலைமணி செல்வன், ஓவியர் இசக்கி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.